Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சசிகலாவிற்கு எந்த ஒரு சிறப்பு சலுகையும் வழங்க வில்லை: பரப்பன அக்ரகாரா தெரிவிப்பு

In இந்தியா
Updated: 13:49 GMT, Feb 18, 2017 | Published: 08:56 GMT, Feb 18, 2017 |
0 Comments
1130
icon_com
This post was written by : Surenth
Sasikala

பரப்பன அக்ரகாரா சிறையில் உள்ள எல்லா கைதிகளும் குற்றவாளிகள் தான் எனவும் சசிகலா உட்பட்ட யாருக்கும் இங்கு சிறப்பு சலுகை அளிக்கப்படவில்லை எனவும் கர்நாடக சிறைத்துறை பிரதி பொலிஸ் ஆணையாளர் சத்திய நாராயணராவ் தெரிவித்துள்ளார்.

சசிகலா பரப்பன அக்ரகாரா சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் பல்வேறு செய்திகள் வெளியாகின்ற நிலையில் இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“ஏனைய கைதிகளுக்கு வழங்கப்படும் உணவுகள் தான் வழங்கப்படுகின்றன. மற்ற கைதிகளுக்கு உணவு வழங்கப்படும் அதே நேரத்தில் தான் சசிகலாவுக்கும் உணவு வழங்கப்படுகின்றது.

சசிகலா சிறையில் நன்றாக தான் இருக்கின்றார். அவர் மிகவும் அமைதியாக உள்ளார். இங்குள்ள எல்லா கைதிகளும் குற்றவாளிகள் தான். யாருக்கும் சிறப்பான சலுகைகள் ஏது, வழங்கப்படவில்லை.

இங்குள்ள எல்லோருக்கும் தினமும் காலை உணவாக புளிசாதம், உப்புமா, அவல்சாதம், எலுமிச்சை சாதம் ஆகியவையும், மதிய உணவாக கேழ்வரகு களி, சோறு, சப்பாத்தி மற்றும் இரவு உணவாக சப்பாத்தி, களி ஆகியவையும் வழங்கப்படுகின்றன.

பெங்களூர் மத்திய சிறையை பொறுத்தவரை ‘ஏ’ தரம், ‘பி’ தரம் என எந்த வித்தியாசமும் இல்லை. சசிகலாவுக்கு எந்த சிறப்பு அறையும் வழங்கப்படவில்லை. மற்ற கைதிகளுக்கு வழங்கப்படுவதைப் போல சாதாரண அறையே ஒதுக்கப்பட்டுள்ளது” என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg