Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

திம்புள்ள விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி படுகாயம்

In இலங்கை
Updated: 09:49 GMT, Feb 18, 2017 | Published: 09:49 GMT, Feb 18, 2017 |
0 Comments
1354
This post was written by : Risha

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று (சனிக்கிழமை) மதியம் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுங்காயமடைந்துள்ளார்.

தலவாக்கலை பகுதியிலிருந்து ஹற்றன் நோக்கி பயணித்த பெஜீரோ ரக வாகனமும் ஹற்றனிலிலிருந்து தலவாக்கலை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதிலேயே குறித்த விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதி கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

முச்சக்கரவண்டியில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்நிலையில், குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg