Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாதுகாப்பின் பொருட்டு அதிகளவான பணத்தை ஜேர்மனி செலவிடும்: வுல்ப்கெங்

In ஐரோப்பா
Published: 09:59 GMT, Feb 18, 2017 |
0 Comments
1244
icon_com
This post was written by : Sylviya

பாதுகாப்பு தொடர்பில் ஜேர்மனி அதிகளவு பணத்தை செலவிடும் என ஜேர்மனியின் நிதி அமைச்சர் வுல்ப்கெங் (Wolfgang Schaeuble ) நேற்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளார்.

மேற்குறித்த கருத்தினை அவர் நேற்று ஆரம்பமான மியூனிக் உச்சிமாநாட்டில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், “பாதுகாப்பு தொடர்பில் அதிகளவு பணத்தினை ஜேர்மனி செலவிட தீர்மானித்துள்ளது. பாதுகாப்பு தொடர்பில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். நேட்டோ அமைப்பில் உள்ள நாடுகள் அனைத்தும் இவ்விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும்”.

“இதே விடயத்தையே ஜேர்மனியின் பாதுகாப்பு அமைச்சர் வொன் டெர் லியெனும் (von der Leyen) தெரிவித்துள்ளார். இதனை நடைமுறைப்படுத்துவதில் நாம் உறுதியாகவுள்ளோம்” என குறிப்பிட்டுள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg