Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிளி.யில் வேகமாக பரவும் பன்றிக்காய்ச்சல்: கர்ப்பிணிகளுக்கு எச்சரிக்கை

In இலங்கை
Updated: 10:58 GMT, Feb 18, 2017 | Published: 10:58 GMT, Feb 18, 2017 |
0 Comments
1095
icon_com
This post was written by : Risha
flu

கிளிநொச்சி மாவட்டத்தில் இரண்டு கர்ப்பிணிப்பெண்கள் பன்றிக்காய்ச்சல் எனப்படும் H1N1 இன்ப்ளுவன்சா நோயினால் பாதிக்கப்பட்டிருப்பது சுகாதார அமைச்சின் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தினால் இன்றையதினம் (சனிக்கிழமை) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி இதுவரை மூன்று குழந்தைகள் உட்பட அறுவர் பன்றிக்காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டமை உறுதியாகியுள்ளது.

கிளிநொச்சிப் பிரதேசத்தில் பன்றிக்காய்ச்சல் மிக விரைவாகப் பரவிவருவதால் சனநெருக்கடி மிகுந்த பகுதிகளில் கூடுதல், பேரூந்து மற்றும் ரயில் போக்குவரத்து என்பவற்றை தவிர்த்துக் கொள்ளுமாறு கர்ப்பிணிகள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

சாதாரண வைரசுக் காய்ச்சலிலிருந்து இந்த தொற்றை பிரித்து அறிவது கடினமாகும். தகுந்த ஆய்வுகூட மற்றும் நிபுணத்துவ சேவையும் விசேட வைத்திய நிபுணர்களது நேரடிக் கண்காணிப்பும் இந்த தொற்றை கண்டறிவதற்கு அவசியமாகும்.

எனவே கர்ப்பிணிப் பெண்களுக்கு காய்ச்சல் ஏற்படின், உடனடியாக –காய்ச்சல் ஏற்பட்ட முதலாவது நாளிலேயே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg