Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நூறாவது டெஸ்ட் போட்டியை இலங்கையுடன் விளையாடவுள்ள பங்களாதேஷ்

In கிாிக்கட்
Updated: 10:36 GMT, Feb 18, 2017 | Published: 10:33 GMT, Feb 18, 2017 |
0 Comments
1423
icon_com
This post was written by : Elakkiya
cwc2015-Bangladesh

பங்களாதேஷ் கிரிக்கட் அணி தனது நூறாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இலங்கை அணியுடன் மோதவுள்ளது.

எதிர்வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டியே பங்களாதேஷ் கிரிக்கட் அணியின் நூறாவது டெஸ்ட் போட்டியாகும்.

கடந்த 2000 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தமது முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய பங்களாதேஷ் 16 ஆண்டுகளின் பின்னர் தனது நூறாவது டெஸ்ட் போட்டியை விளையாடவுள்ளது.

அந்தவகையில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள பங்களாதேஷ் அணி முதலில் இரண்டு பயிற்சிப் போட்டிகளில் விளையாடவுள்ளது.

அதன்பின்னர் மார்ச் 7 ஆம் திகதி ஆரம்பித்து டெஸ்ட் போட்டித் தொடரில் விளையாடவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg