Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடக்கு லண்டன் மோதல்: ஒருவர் உயிரிழப்பு

In
Published: 10:26 GMT, Feb 18, 2017 |
0 Comments
1316
icon_com
This post was written by : Sylviya
11

வடக்கு லண்டனில் குழுக்கள் சிலவற்றுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து, அது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மோதல் நேற்று (வெள்ளிக்கிழமை) ஜி.எம்.டி நேரப்படி இரவு 19.15 மணியளவில்  ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோதல் தொடர்பில் பொதுமக்கள் சிலரால் பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்தே குறித்த இடத்திற்கு பொலிஸார் விரைந்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து, சம்பவ இடத்தில் 20 வயது மதிக்கத்தக்க ஒருவர் கழுத்தில் கடும் காயத்துடன் வீழ்ந்து கிடந்ததை பொலிஸார் அவதானித்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த மோதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த மோதலை நேரில் பார்வையுற்றவர்கள் எவரேனும் இருப்பின், அவர்கள் பொலிஸாரை உடனடியாக அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg