Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மோதலில் ஆண் ஒருவர் உயிரிழப்பு: இருவர் கைது

In
Updated: 11:30 GMT, Feb 18, 2017 | Published: 11:30 GMT, Feb 18, 2017 |
0 Comments
1351
This post was written by : Sylviya

அயர்லாந்தைச் சேர்ந்த 29 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் 25 வயதுடைய பெண் மற்றும் 36 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலையுண்ட ஆண், அவுஸ்ரேலியாவின் சிட்னி நகருக்கு பயணித்திருந்த போதே அங்கு படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று (சனிக்கிழமை) உள்ளூர் நேரப்படி 12.15 மணியளவில் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் சிலருக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியதைத் தொடர்ந்தே குறித்த ஆண் கொல்லப்பட்டுள்ளார் என பொலிஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்நிலையில், இது குறித்த விசாரணைகள் வலுப்பெற்றுள்ளதாக அண்மைய தகவல்கள் குறிப்பிடுகின்றன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg