Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முன்னணி நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் தொல்லை: திரையுலகத்தினர் அதிர்ச்சி

In சினிமா
Updated: 11:56 GMT, Feb 18, 2017 | Published: 11:56 GMT, Feb 18, 2017 |
0 Comments
1208
This post was written by : Anojkiyan

தமிழில் தீபாவளி, சித்திரம் பேசுதடி, அசல், ஜெயம் கொண்டான் உள்பட பல படங்களில் நடித்த தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையான பாவனா, நேற்றிரவு கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்குட்பட்ட சம்பவம் திரையுலகத்தினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது இவர், நடித்து வரும் ஒரு படத்தின் படப்பிடிப்பு திருச்சூர் அருகே நடந்து வருகிறது. இதில் பங்கேற்று விட்டு நடிகை பாவனா நேற்று இரவு காரில் திருச்சூரில் இருந்து கொச்சிக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

கார் கொச்சியை அடுத்த அங்கமாலி அருகே சென்றபோது, இன்னொரு காரில் வந்த கும்பல் திடீரென பாவனாவின் காரை வழி மறித்தனர். அவர்கள் பாவனாவை மிரட்டி காருக்குள் ஏற்றிக்கொண்டனர். பின்னர் சாரதியை மிரட்டி காரை தொடர்ந்து ஓட்டும்படி எச்சரித்தனர்.

அவர், காரை ஓட்டத் தொடங்கியதும் அந்த கும்பல் பாவனாவை மிரட்டியதோடு, அவருக்கு பாலியல் தொல்லையும் கொடுத்தனர். இதை அந்த கும்பல் கைப்பேசியில் படம் எடுத்து கொண்டனர். இதன்பின், கார் கொச்சியை நெருங்கியது. பாலாரி வட்டம் சந்திப்பை அடைந்த போது, அந்த கும்பல் காரை நிறுத்தி கீழே இறங்கிக் கொண்டனர். பின்னர் அவர்கள், இன்னொரு காரில் ஏறி தப்பிச் சென்றனர்.

மர்ம கும்பலின் நடவடிக்கையால் அதிர்ச்சியில் உறைந்து போன நடிகை பாவனா, கொச்சி பகுதியில் வசித்து வரும் ஒரு இயக்குனரின் வீட்டில் தஞ்சமடைந்தார். அவரிடம் மர்ம கும்பலால் காரில் கடத்தப்பட்ட தகவலையும், தனக்கு நேர்ந்த கொடுமையையும் கூற பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

பாவனா கடத்தப்பட்டதற்கு காரணம் என்ன? முன் விரோதத்தில் இந்த சம்பவம் நடந்ததா? என்ற கோணத்தில் பொலிஸார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg