Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வருடந்தோறும் புகைத்தலினால் 25,000 பேர் உயிரிழக்கின்றனர்: சுகாதார அமைச்சர் தகவல்

In இலங்கை
Updated: 14:22 GMT, Feb 18, 2017 | Published: 14:17 GMT, Feb 18, 2017 |
0 Comments
1275
icon_com
This post was written by : Anojkiyan
Rajitha

இலங்கையில் வருடத்துக்கு 25000 பேர் வரையில் புகைத்தலால் இறப்பதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தகவல் வெளியிட்டுள்ளார்

சுகாதார அமைச்சில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியளாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

இந்நாட்டில் ஊடகங்களும் பிரச்சினைகளை பற்றி விமர்சிக்கின்றனவே தவிர நாம் செய்யும் நல்ல விடயங்களை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில்லை. இவ்வருடத்தை உலக சுகாதார தாபனம் புகைத்தலுக்கு எதிரான வருடமாக பெயரிட்டுள்ளது.

புகைத்தலை ஒழிப்பதற்காக ஒரு ட்ரில்லியன் பணத்தை செலவழிக்கின்றது. இலங்கையிலும் கூட வருடத்துக்கு 25000 பேர் வரையில் புகைத்தலால் இறக்கின்றனர். எனவே நல்லாட்சி அரசாங்கத்தில் புகைத்தலை இல்லாமலாக்க வேண்டும் என்பதற்காக புகையிலைசார் பொருட்களுக்கு 90 வீதம் வரையில் வரியை அதிகரித்திருந்தோம்.

இந்நிலையில் இதற்கெதிராக நாட்டுக்கு பல மில்லியன் நட்டம் ஏற்படும் என தெரிந்தும் இந்த முடிவை எடுத்தோம். அமைச்சரவையிலும் கூட எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். புகையிலைசார் பொருட்களை அவர்களின் பேச்சைக் கேட்டு நிர்ணயித்திருந்தால் 269 மில்லியன் இலாபம் கிடைத்திருக்கும். அந்த இலாபத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒருபோதும் எதிர்ப்பார்க்கவில்லை. எனவே நாம் நினைக்கும் மாற்றம் பிரச்சினைகளுக்கு மத்தியிலும் வெற்றியளிக்கும். என கூறினார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg