Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பருத்தித்துறையில் விபத்து: இளைஞர் ஒருவர் உயிரிழப்பு

In இலங்கை
Published: 15:00 GMT, Feb 18, 2017 |
0 Comments
1309
icon_com
This post was written by : Anojkiyan
pra

யாழிலிருந்து பருத்தித்துறை நோக்கி சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிலோன்றும், சிறிய ரக உழவு இயந்திரமும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ் நகரை சேர்ந்த செல்லக்கணபதிப்பிள்ளை சஞ்ஜீவ் என்ற 23 வயதுடைய இளைஞரே இவ் விபத்தில் உயிரிழந்துள்ளார். மேலும், உழவு இயந்திர சாரதி படுக்காயமடைந்த நிலையில், மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்து இன்று (சனிக்கிழமை) பிற்பகல் 3மணியளவில் பருத்தித்துறை வீதி, குஞ்சர் கடைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிள் செலுத்திய இளைஞன் வேகக் கட்டுப்பாட்டை இழந்ததே குறித்த விபத்து சம்பவித்ததற்கான காரணம் என ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

acca

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg