Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்தை நிலைநிறுத்த தவறியுள்ளது: தினேஷ் குற்றச்சாட்டு

In இலங்கை
Published: 15:22 GMT, Feb 18, 2017 |
0 Comments
1161
icon_com
This post was written by : Anojkiyan
dinesh-gunawardena-press-meet-01

அரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்தை நிலைநிறுத்த தவறியுள்ளதாக ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன குற்றஞ்சாட்டியுள்ளார்.

பதுளையில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

மூன்று மாதங்களுக்குள் உள்ளுராட்சிமன்ற தேர்தல் நடத்தப்படாதபட்சத்தில் அதற்கு எதிராக கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். முறையற்ற பொருளாதார அணுகுமுறைகளால் அரசாங்கம் நாட்டை சீரழிக்கின்றது. இதனால் எதிர்காலத்தில் நாட்டு மக்கள் மூன்றுவேளை உணவுக்கு அள்ளாடும் நிலை தோன்றும்.

மேலும், அடுத்துவரும் மூன்று மாதங்களில் உள்ளுராட்சிமன்ற தேர்தல் நடத்தப்படாதபட்சத்தில் லட்சக்கணக்கான மக்களுடன் வீதியில் இறங்கி போராடப்போவதாக தினேஷ் குணவர்தன எச்சரித்துள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg