Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ராணுவ முகாமுக்கு அருகில் மேலும் சில மனித எச்சங்கள் மீட்பு (2ஆம் இணைப்பு)

In இலங்கை
Updated: 16:53 GMT, Feb 20, 2017 | Published: 02:32 GMT, Feb 19, 2017 |
0 Comments
1584
This post was written by : Varshini
murakottanchenai (4)
 மட்டக்களப்பு முறக்கொட்டாஞ்சேனை ராணுவ முகாமுக்கு அருகில் ஏற்கனவே மீட்கப்பட்ட எலும்புத்துண்டுகள் மனித எச்சங்கள் என சந்தேகிக்கப்பட்டு வரும் நிலையில், இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணியின் போது மேலும் சில மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.இன்று (திங்கட்கிழமை)  காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை முன்னெடுக்கப்பட்ட அகழ்வின் போது, இரண்டு பித்தளை மாலைகள் மற்றும் கம்பித் துண்டுகளும் மீட்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நாளைய தினமும் குறித்த அகழ்வுப் பணியை தொடர்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதவான் எம்.ஐ.ரிஸ்வி, மட்டக்களப்பு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி, பொலிஸார் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் இன்றைய அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ராணுவ முகாமுக்கு அருகே மனித எச்சங்கள்! – மேலதிக ஆய்வுகள் நாளை

மட்டக்களப்பு – முறக்கொட்டாஞ்சேனையில் ராணுவ முகாமுக்கருகே மனித எச்சங்கள் காணப்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட இடத்தைச் சூழ நாளையும் (திங்கட்கிழமை) நாளை மறுதினமும் மேலதிக ஆய்வுகள் இடம்பெறவுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மனித எச்சங்கள் என சந்தேகிக்கப்படும் தடயங்கள் காணப்பட்ட இடத்துக்கு இம்மாதம் 2ஆம் திகதி விஜயம் செய்த மேலதிக நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமாகிய முஹம்மத் இஸ்மாயில் முஹம்மத் றிஷ்வி, சிரேஷ்ட வைத்திய நிபுணர் எம்.சிவசுப்பிரமணியம், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய நிபுணர் பி.சி.சுரங்க பெரேரா, கண்டி வைத்தியசாலை வைத்திய நிபுணர் அஸித்த கீர்த்தி, மாத்தளை பொது வைத்தியசாலை வைத்திய நிபுணர் டி.ஐ.வைத்தியலங்கார, புவிச்சரிதவியல் திணைக்கள அதிகாரி ஜே.ஏ.ரி.வி.பிரியந்த ஆகியோர் அடங்கிய விஷேட குழு அங்கு விசாரணை நடத்தியிருந்ததோடு, நாளைய தினம் குறித்த இடத்தை அகழ்ந்து ஆய்வுசெய்ய தீர்மானித்திருந்தது.

இதன் பிரகாரம் நாளைய தினம் விசேட பாதுகாப்புக்கு மத்தியில் குறித்த பிரதேசத்தை சூழவும் ஆய்வு நடத்துவதற்கு ஏற்பாடாகியுள்ளது.

மட்டக்களப்பு – கொழும்பு பிரதான நெடுஞ்சாலை அருகே முறக்கொட்டாஞ்சேனையில் அமைந்துள்ள ராணுவ முகாம், கடந்த 1990ஆம் ஆண்டு முதல் இயங்கி வருவதாக உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த இடத்தின் பெரும்பாலான காணிகளையும் பொது மக்களின் குடிமனைகளையும் அரசாங்க பாடசாலையையும் கைப்பற்றியிருந்த படையினர், தாம் கைப்பற்றியிருந்த காணிகளில் ஒரு பகுதியை கடந்த 2014ஆம் ஆண்டு மீளவும் ஒப்படைத்திருந்தனர்.

அவ்வாறு விடுவிக்கப்பட்ட காணிகளில் ராணுவ முகாம் வேலியுடன் சேர்ந்ததாக உள்ள காணியில் அப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் வீடு கட்டும்போது கடந்த 30.10.2016 அன்று எலும்பு எச்சங்களும் டயர் மற்றும் புகையிரத சிலிப்பர் கட்டைகளை எரித்த கரிகளும் தென்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நீதவான், வைத்திய அதிகாரிகள் கொண்ட குழுவினர் சென்று ஆய்வு நடத்தியதோடு, வீடமைப்பு பணிகளையும் தற்காலிகமாக கைவிடுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.

இதேவேளை கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் பகுப்பாய்வுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

murakottanchenai (2) murakottanchenai (5) murakottanchenai (3) murakottanchenai (1)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg