Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தல்: 3ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று ஆரம்பம்

In இந்தியா
Published: 04:31 GMT, Feb 19, 2017 |
0 Comments
1121
icon_com
This post was written by : Shailu

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்கான 3ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று (ஞாயிற்றுகிழமை) ஆரம்பமாகியது.

403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச சட்டசபைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் முதல் 2 கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில் 3-ம் கட்ட தேர்தல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது.

மாநிலத்தின் மத்திய மற்றும் அவாத் பிராந்தியங்களில் உள்ள 12 மாவட்டங்களை சேர்ந்த 69 தொகுதிகளில் இந்த தேர்தல் நடைபெறுகிறது.

இதில் பா.ஜனதா, சமாஜ்வாடி-காங்கிரஸ் கூட்டணி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 821 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், இன்றைய தேர்தலில் வாக்களிக்க 2.41 கோடி வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

இன்றைய வாக்குப்பதிவுக்காக 25,603 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ள நிலையில், இங்கு காலை 7 மணிக்கு ஆரம்பமாகியுள்ள வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை இடம்பெறவுள்ளது.

இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதோடு, துணை இராணுவம் மற்றும் மாநில பொலிஸார் என 2 இலட்சத்துக்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg