Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அச்சுறுத்தலுக்கு மத்தியில் இருபது நாட்களாக வீதியில் அவஸ்தையுறும் மக்கள்

In இலங்கை
Published: 04:29 GMT, Feb 19, 2017 |
0 Comments
1306
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam
kepapilavu

விமானப்படையினர் மற்றும் ராணுவத்தினரின் தொடர் கண்காணிப்புக்கும் அச்சுறுத்தலுக்கும் மத்தியில் இரவு பகலாக போராடிவரும் முல்லைத்தீவு கேப்பாப்பிலவு – பிலக்குடியிருப்பு மக்களின் போராட்டம் இன்றுடன் 20 நாட்களை எட்டியும், அதுதொடர்பில் அரசாங்கம் கண்டுகொள்ளாமல் இருப்பது பல்வேறு தரப்பினரை விசனமடைய வைத்துள்ளது.

யுத்தத்தின் பின்னர் 7 வருடங்களாக படையினர் இம் மக்களது காணிகளை கையகப்படுத்தி வைத்துள்ள நிலையில், அவற்றில் ஒரு பகுதியை விடுவிப்பதாக கடந்த மாதம் 31ஆம் திகதி அறிவித்திருந்தனர். அதன் பிரகாரம் அங்கு சென்ற மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. விரக்தியில் அப்போதே வீதியில் அமர்ந்து சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்த மக்கள், இரவு பகலாக இன்றுவரை போராடி வருகின்றனர்.

குறித்த காணிகள் அரசாங்கத்திற்கு உரியதென ராணுவம் ஒருபுறம் தெரிவித்து வருவதோடு, காணி விடுவிப்பு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அரசாங்கம் தெரிவிக்கின்றது. ஆக, காணி விடுவிப்பில் எந்தவொரு தரப்பினரும் எவ்வித உறுதிமொழியையும் வழங்காத நிலையில் தமது காணிகளுக்குள் காலடி எடுத்து வைக்கும்வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்ற மனநிலையில் மக்கள் உறுதியாக உள்ளனர்.

இம் மக்களுடன் பல்வேறு பிரதேச மக்கள் கைகோர்த்துள்ளதோடு, புதுக்குடியிருப்பில் சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டமும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மக்கள் போராட்டத்தை சிதைப்பதை நோக்காகக் கொண்டு பல்வேறு அச்சுறுத்தல்களை மேற்கொண்டுவரும் படையினரின் செயற்பாடுகள் வெட்டவெளிச்சமாகியுள்ள நிலையில், அரசாங்கம் இம் மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டுமென பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுக்கின்றனர்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg