Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முச்சக்கரவண்டி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு: மூவர் படுகாயம்

In இலங்கை
Updated: 04:54 GMT, Feb 19, 2017 | Published: 04:54 GMT, Feb 19, 2017 |
0 Comments
1465
This post was written by : Varshini

கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பேதலாவ கதிரேகொட பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று மண்மேட்டில் மோதுண்டு விபத்திற்குள்ளாகியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்து கினிகத்தேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கதிரேகொட பகுதியில் மரண வீடொன்றிற்கு சென்றுவிட்டு தெஹிகஸ்தென்ன எனும் பகுதியிலுள்ள தமது வீடுகளுக்கு வரும்போது இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை இவ் அனர்த்தம் நேர்ந்துள்ளது.

குறித்த முச்சக்கரவண்டியில் சாரதி உட்பட ஐந்து பேர் பயணித்துள்ளதோடு, சாரதி மதுபோதையில் இருந்தமையே விபத்திற்கு காரணமென கண்டறியப்பட்டுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர் கினிகத்தேனை – தெஹிகஸ்தென்ன பகுதியை சேர்ந்த அலாகோன் முதியன்சலாகே (வயது – 60) என அடையாளம் காணப்பட்டுள்ளார். காயமடைந்தவர்களுள் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

முச்சக்கரவண்டி சாரதியை கைதுசெய்துள்ள கினிகத்தேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ginigathena accident (2) ginigathena accident (3) ginigathena accident (4)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg