Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்தார் முதலமைச்சர் பழனிசாமி (2ஆம் இணைப்பு)

In இந்தியா
Updated: 06:27 GMT, Feb 19, 2017 | Published: 04:58 GMT, Feb 19, 2017 |
0 Comments
1293
icon_com
This post was written by : Shailu
edappadi-palanisamy-meets-the-governor

தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று(ஞாயிற்றுக்கிழமை) சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் 122 வாக்குகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு வெற்றிபெற்றதையடுத்து ஆளுநர் வித்யாசாகர் ராவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசினார்.

அவருடன் அமைச்சர்கள் செங்கோட்டையன், செல்லூர் ராஜூ, ஜெயக்குமார் உள்ளிட்டோரும், அ.தி.மு.க துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரனும் ஆளுநரை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

மேலும் இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாக இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.

ஆளுநர் வித்யாசாகர் ராவுடன் இன்று முதலமைச்சர் இ.பி.எஸ் சந்திப்பு

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்றுள்ள நிலையில், ஆளுநர் வித்யாசாகர் ராவை இன்று (ஞாயிற்றுக்கிழமை) சந்திக்கவுள்ளார்.

சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் 122 வாக்குகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு வெற்றிபெற்றது.

இந்நிலையில், ஆளுநர் வித்யாசாகர் ராவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 11 மணிக்கு நேரில் சந்திக்க இருக்கிறார்.

அப்போது நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதற்கான கடிதத்தை ஆளுநரிடம் முதலமைச்சர் அளிக்க இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg