Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சம்சுங் நிறுவன துணைத் தலைவர் கையில் விலங்கிட்ட நிலையில் நீதிமன்றில் ஆஜர்!

In
Published: 05:40 GMT, Feb 19, 2017 |
0 Comments
1954
icon_com
This post was written by : Anojkiyan

தென்கொரியாவில் ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட சம்சுங் நிறுவனத்தின் துணைத் தலைவர் லீ ஜே யோங் கையில் விலங்கிட்ட நிலையில் விசாரணைக்காக நீதிமன்றத்தில் நேற்று (சனிக்கிழமை) ஆஜர்படுத்தப்பட்டார்.

லீ ஜே யோங், கைவிலங்கிட்டு, கயிறுகளால் கட்டப்பட்ட நிலையில் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டார். இதன்போது, நீதிமன்றத்தின் வெளியே செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு எந்தவித பதில்களும் தெரிவிக்காமல் மௌனமாக நீதிமன்றத்திற்குள் சென்றார்.

இதே நிலையில் அவரிடம் அரசு வழக்கறிஞ்சர்கள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணை முடிந்த பிறகு, அவர் வெளியே வந்தபோது, அங்கு காத்திருந்த செய்தியாளர்கள் அவரிடம் சரமாரியாக கேள்வி கேட்டனர். ஆனால் அவர் அப்போதும் எந்த பதிலும் கூறாமல் மௌனமாக காவலர்களுடன் சென்றுவிட்டார். அவர் மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவரது அறையில் அடைக்கப்பட்டார்.

இவர் தனது நிறுவனத்துக்கு அரசு சாதகமாக நடந்து கொள்வதற்காக தென் கொரிய அதிபர் பார்க் குன்னுக்கும், அவரது தோழியான சோய் சூன் சில்லுக்கும் சுமார் ₹241 கோடி லஞ்சமாக கொடுத்ததாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இது தவிர, சம்சுங் நிறுவன நிதி கையாடல், வெளிநாட்டு சொத்துகளை மறைத்தல் உள்ளிட்ட பல்வேறு மோசடி புகார்கள் குறித்தும் விசாரணை நடந்தது.

நிதி மோசடி உள்ளிட்ட புகார்களின் பேரில் சோய் சூன்-சில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டார். லீ ஜே-யோங் அடைக்கப்பட்டுள்ள அதே சிறையில் சோய் சூன்-சில் அடைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தென் கொரியாவின் பொருளாதாரத்தில் சம்சுங் நிறுவனத்தின் பங்களிப்பு சுமார் 20 சதவீதம் என்று கூறப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg