Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நல்லாட்சியின் செயற்பாடுகளை தடுத்து நிறுத்த முனைந்தால் தக்க பதிலடி கொடுப்போம்: பிரதமர்

In இலங்கை
Updated: 05:53 GMT, Feb 19, 2017 | Published: 05:44 GMT, Feb 19, 2017 |
0 Comments
1275
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam

தேசிய அரசாங்கத்தில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அவற்றை தடுத்து நிறுத்த முற்படுபவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்போம் என கூறியுள்ளார்.

கேகாலை ஹெம்மாத்தகம பிரதேசத்தில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்-

”நாட்டை கட்டியெழுப்பும்போது ஏற்படும் இடையூறுகளை தவிக்க நாம் வீதிக்கு இறங்கவும் தயராக உள்ளோம். அடுத்த மாத இறுதிக்குள் அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தி பணிகளை ஆரம்பிப்போம். புதிதாக கப்பல் நிறுத்துமிடங்களை ஆரம்பிப்போம். சீமெந்து தொழிற்சாலையை ஆரம்பிப்போம்.

இவை தொடர்பில் நாடாளுமன்றில் மேலும் பல சட்டமூலங்களை கொண்டுவருவோம். இதில் ஒன்றையேனும் யாராலும் தடுத்து நிறுத்த முடியாது,

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் எதிர்வரும் 2020ஆம் ஆண்டுவரை ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து பல வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும். எம்மை சீண்டிப்பார்க்க முயற்சிக்க வேண்டாம். நாம் வீதிக்கு இறங்கினால், தற்போது நடைபெறும் சிறு சிறு ஆர்ப்பாட்டங்களை போல அது அமையாது. என்ன நடக்குமென நான் கூறமாட்டேன். ஆகையால் உங்களுடைய விளையாட்டுக்களை நிறுத்திக்கொள்ளுங்கள். அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுபவர்களுக்கு ஐக்கிய தேசிய முன்னணி உரிய பதிலை வழங்கும்” என்றார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg