Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம்: முதல்வர் சித்தராமையா உறுதி

In இந்தியா
Updated: 06:50 GMT, Feb 19, 2017 | Published: 06:48 GMT, Feb 19, 2017 |
0 Comments
1145
icon_com
This post was written by : Shailu
KARNATAKA JOINT SESSION

மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என உறுதிபட தெரிவித்துள்ள கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் அதனை எதிர் கொண்டு மேகதாதுவில் அணை கட்டப்படும் என்று தெரிவித்துள்ளார்.

பெங்களூரில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்ட முதலமைச்சர் சித்தராமையா செய்தியாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கையிலேயே மேற்குறித்தவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், ‘காவிரி டெல்டா பகுதியில் உள்ள மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை செயல்படுத்த கர்நாடக மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இதற்கான திட்டவரைவு தயாரிக்க உலகளவில் டெண்டர் விடப்பட்டுள்ள நிலையில், 59,000 ரூபாய் கோடி செலவில் இத்திட்டம் நிறைவேற்றப்படும்

கர்நாடகாவில் அதிக மழை பெய்து 4 அணைகளும் நிரம்பிய பின்னர் தமிழகத்திற்கு அதிகளவில் தண்ணீர் திறந்துவிடப்படுகின்றது. இயற்கை தரும் கொடையை யாரும் தங்களுக்கு மட்டுமே சொந்தமானது என உரிமை கோர முடியாது. எனவே எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் அரசியல் கட்சியினரும், விவசாயிகளும் போராட்டம் நடத்தி வருகின்ற நிலையில் சித்தராமையா இவ்வாறு கூறியிருப்பது தமிழகத்தில் கடும் எதிர்ப்பை கிளம்பியுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg