Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அர்ஜென்டினாவில் கோர விபத்து: 3 குழந்தைகள் உட்பட 19 பேர் உயிரிழப்பு

In உலகம்
Updated: 07:21 GMT, Feb 19, 2017 | Published: 06:50 GMT, Feb 19, 2017 |
0 Comments
1144
icon_com
This post was written by : Anojkiyan
bus

அர்ஜென்டினாவில் பேரூந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 19 பேர் உயிரிழந்துள்ளதோடு, பலர் காயம் அடைந்துள்ளனர்.

இதில் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடுமென அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இவ் விபத்தில் உயிரிழந்தவர்களில் 3 குழந்தைகளும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அர்ஜென்டினாவின் சிலி நாட்டின் எல்லையில் உள்ள மென்டோஷா மாகாணத்தின், சுற்றுலா தளமான அகான் காகுவா மலைப்பகுதியிலேயே குறித்த பேரூந்து ஒரு வளைவில் திரும்பிய போது இவ் விபத்துக்குள்ளாகியுள்ளது.

உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் அர்ஜென்டினாவை சேர்ந்தவர்கள். ஆனால் அவர்கள் சிலி, கொலம்பியா மற்றும் ஹைதியில் இருந்து வந்து குடியேறியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ் விபத்து குறித்து பொலிஸார் தற்போது தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg