Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எதிர்கட்சிகள் இல்லாமல் முன்னெடுக்கப்பட்ட வாக்கெடுப்பு முரண்பாடானது: திருச்சி சிவா

In இந்தியா
Updated: 07:22 GMT, Feb 19, 2017 | Published: 07:22 GMT, Feb 19, 2017 |
0 Comments
1162
icon_com
This post was written by : Shailu
Trichy Siva

சட்டப்பேரவையில் எதிர்கட்சிகள் இல்லாமல் முன்னெடுக்கப்பட்ட வாக்கெடுப்பு முரண்பாடானது என்று தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

நம்பிக்கை வாக்கெடுப்பினை செல்லாது என அறிவிக்கக் கோரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களான திருச்சி சிவா, டி.கே.எஸ்.இளங்கோவன் மற்றும் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் ஆளுநர் வித்யாசாகர் ராவை நேரில் சந்தித்து முறைப்பாடு அளித்தனர்.

இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, எதிர்கட்சி உறுப்பினர்கள் இல்லாமல் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பினை செல்லாது என்று அறிவிக்கக் கோரி ஆளுநரிடம் கடிதம் கொடுத்ததாகத் தெரிவித்தார்.

எதிர்கட்சிகள் இல்லாமல் முன்னெடுக்கப்பட்ட வாக்கெடுப்பு முரண்பாடானது என்று குறிப்பிட்ட சிவா, சபாநாயகர் ஒருதலைபட்சமாக நடந்துகொள்வதாகவும் குற்றம்சாட்டினார்.

நம்பிக்கை வாக்கெடுப்புக்காக கூட்டப்பட்ட சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் கடும் அமளி ஏற்பட்டதையடுத்து, திமுக உறுப்பினர்களை வெளியேற்ற சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். இதையடுத்து தி.மு.க உறுப்பினர்கள் அனைவரும் காவலர்களால் வெளியேற்றப்பட்டனர்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg