Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்திய மரதன் ஓட்டப்போட்டி இன்று ஆரம்பம்

In விளையாட்டு
Published: 07:44 GMT, Feb 19, 2017 |
0 Comments
1164
icon_com
This post was written by : Sylviya

சாகச விளையாட்டுக்கள் மற்றும் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் வகையில், இந்தியாவின் மத்திய சட்டீஸ்கர் மாநிலத்தில் (Chhattisgarh state) இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பமாகியுள்ள மரதன் ஓட்டப்போட்டியில் பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டுள்ளனர்.

குறித்த மரதன் ஓட்டப் போட்டியில், இந்தியாவின் விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் (Vijay Goel), புகழ்பெற்ற இந்திய தடகள வீரர் மிக்கா சிங் (Milkha Singh) மற்றும் மத்திய சட்டீஸ்கர் முதலமைச்சர் ராமன் சிங் (Raman Singh) ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.

இந்திய மல்யுத்த வீரரும் பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றவருமான கீதா ஃபோகட்டும் இதில் பங்கேற்றுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

இந்த மரதன் ஓட்டப்போட்டி தொடர்பில் கருத்து தெரிவித்த விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய், ‘தடகள வீரர்கள் மற்றும் பொது மக்கள் கலந்துகொள்ளும் வகையிலேயே குறித்த மரதன் ஓட்டப்போட்டி ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. எமது நாட்டில் மரதன் ஓட்டப்போட்டி மிகப் பிரசித்து பெற்றது என்று தான் கூறவேண்டும். சுமார் 15,000 பேர் வரை இந்த மரதன் ஓட்டப்போட்டிகளில் பற்குபற்றுவர். ஆனால் அடுத்தமுறை 50,000 பேர் வரை கலந்துகொள்வர் என என்னால் உறுதியாக கூற முடியும்’ என தெரிவித்தார்.

குறித்த மரதன் ஓட்டப்போட்டியில் வெற்றி பெறுவோருக்கு 3 மில்லியன், அதாவது 44,896 அமெரிக்க டொலர்கள் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இம்முறை ஆரம்பமாகியுள்ள இந்த மரதன் ஓட்டப்போட்டியில் இங்கிலாந்து, சுவிட்ஸர்லாந்து மற்றும் கென்யா ஆகிய நாடுகளில் இருந்தும் 22 தடகள வீரர்கள் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg