Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒரு நாளில் 27 தடவை மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிழைத்த மருத்துவ அதிசயம்: லண்டனில் சம்பவம்

In
Updated: 09:22 GMT, Feb 19, 2017 | Published: 08:44 GMT, Feb 19, 2017 |
0 Comments
1185
icon_com
This post was written by : Anojkiyan
royal

24 மணி நேரத்தில் அதாவது ஒரு நாளில் 27 தடவை மாரடைப்பு தாக்கி, உயிர் பிழைத்த மருத்துவ அதிசயமொன்று லண்டனில் இடம்பெற்றுள்ளது.

54 வயதுடைய 3 குழந்தைகளின் தந்தையான ரேவுட் ஹால் என்பவரே இவ்வாறு உயிர் பிழைத்துள்ளார்.

சம்பத்தன்று வொர்செஸ்டர்ஷைர் ரோயல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஹாலுக்கு தொடர்ந்து 27 தடவை மாரடைப்பு ஏற்பட்டது.. ஆனாலும் அவர் உயிர் பிழைத்தார். இது ஒரு அதிசய நிகழ்வு என மருத்துவர்கள் வர்ணித்துள்ளனர்.

இது குறித்து ரேவுட் ஹால் கூறுகையில், நான் உயிர் பிழைப்பேன் என கருதவில்லை. ஒரு நாளில் 27 தடவை நான் இறந்து உயிர்பெற்று இருக்கிறேன். மருத்துவர்கள் தான் எனது உயிரை காப்பாற்றியுள்ளனர். அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்  என கூறினார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg