Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடக்கு மாகாணத்தில் பெட்மிண்டன் அணியை உருவாக்க நடவடிக்கை

In விளையாட்டு
Updated: 09:25 GMT, Feb 19, 2017 | Published: 08:26 GMT, Feb 19, 2017 |
0 Comments
1089
icon_com
This post was written by : Surenth
Badminton 03

வடக்கு மாகாணத்தில் உள்ள 20 வயதிற்கு உட்பட்ட பெட்மிண்டன் வீர, வீராங்கனைகளை ஒன்றிணைத்து பயிற்சி பட்டறையும் அணியை உருவாக்கும் செயலமர்வும் இடம்பெற்று வருகின்றது.

உலக தமிழ் பெட்மிண்டன் பேரவையின் அனுசரணையுடன் மன்னார் பொது விளையாட்டு அரங்கின் உள்ளக மைதானத்தில் நேற்று (சனிக்கிழமை) ஆரம்பிக்கப்பட்டது. குறித்த நிகழ்வு இரண்டு நாட்களுக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது வடக்கு மாகாணத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டிருந்தனர். இந்த நிகழ்வின் இறுதியில் உருவாகும் அணியினர் எதிர்வரும் ஜூலை மாதம் கனடாவில் நடைபெறவுள்ள பெட்மிண்டன் போட்டிகளில் விளையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில், வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களும் இவ் விசேட பயிற்சி பட்டறைக்காக கனடாவில் இருந்து உலக தமிழ் பெட்மிண்டன் பேரவையின் (WTBF) சார்பாக வருகை தந்த ஜெயகாந்தன் அவர்களும் மன்னார் மாவட்ட பெட்மிண்டன் சங்கத்தின் தலைவர் மற்றும் விளையாட்டு அதிகாரிகள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

Badminton 01 Badminton 02 Badminton 04 Badminton 05

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg