Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

படகு விபத்தில் 32 பேர் மீட்பு: 11 பேர் உயிரிழப்பு (3ஆம் இணைப்பு)

In இலங்கை
Updated: 11:07 GMT, Feb 19, 2017 | Published: 08:31 GMT, Feb 19, 2017 |
0 Comments
1681
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam
Tamil-Daily-News-Paper_10558283330

களுத்துறை – பயாகல கட்டுகுறுந்த கடற்பரப்பில் இடம்பெற்ற படகு விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11ஆக அதிகரித்துள்ளதோடு, 32 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் பேருவளை மற்றும் களுத்துறை – நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, ஐவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடற்படை மற்றும் வான்படை இணைந்து தொடர்ந்தும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.

படகு விபத்து உயிரிழப்பு 10ஆக அதிகரிப்பு: மீட்புப் பணியில் வான் படை இணைவு (2ஆம் இணைப்பு)

களுத்துறை – பயாகல கட்டுகுறுந்த கடலில் படகு கவிழ்ந்ததில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது.

பலர் காணாமல் போயுள்ள நிலையில், மீட்புப் பணியில் கடற்படையுடன் வான் படையும் இணைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

யாத்திரீகர்கள் சென்ற படகு கவிழ்ந்தது: 9 பேர் உயிரிழப்பு – பலரை காணவில்லை

களுத்துறை – பயாகல கட்டுகுறுந்த கடற்பரப்பில் யாத்திரீகர்களை ஏற்றிச்சென்ற படகு கவிழ்ந்ததில், 9 பேர் உயிரிழந்துள்ளதோடு பலர் காணாமல் போயுள்ளனர்.

பேருவளை கடற்பகுதியில் உள்ள மத வழிபாட்டு தலமொன்றிற்கு யாத்திரீகர்களை ஏற்றிச்சென்ற படகே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இச் சம்பவத்தில் சுமார் 20இற்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளதாக அஞ்சப்படுகிறது.

காணாமல் போனோரை மீட்கும் பணியில் கடற்படையினரும் சுழியோடிகளும் ஈடுபட்டுள்ளனர்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg