Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சட்டப்பேரவை நிகழ்வுகள் தொடர்பில் குடியரசுத் தலைவரிடம் முறையிட உள்ளோம்: மு.க.ஸ்டாலின்

In இந்தியா
Published: 09:08 GMT, Feb 19, 2017 |
0 Comments
1125
icon_com
This post was written by : Shailu

சட்டப்பேரவை நிகழ்வுகள் தொடர்பாக ஆளுநரிடம் ஆதாரங்களுடன் முறைப்பாடு அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ள தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவை நிகழ்வுகள் தொடர்பாக குடியரசுத் தலைவரிடம் முறையிட உள்ளதாகவும் அதற்காக நேரம் கேட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே மேற்குறித்த விடயத்தை அவர் தெரிவித்துள்ளார்.

நம்பிக்கை வாக்கெடுப்புக்காகக் கூட்டப்பட்ட சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் அமளியில் ஈடுபட்டதாகக் கூறி எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள், அவை காவலர்களால் வெளியேற்றப்பட்டனர்.

இந்த சம்பவத்தையடுத்து, திமுக உறுப்பினர்கள் தாக்கப்பட்டதாக ஆளுநரிடம் ஸ்டாலின் நேற்று (சனிக்கிழமை) முறைப்பாடு அளித்திருந்தார்.

அதேபோல, எதிர்கட்சிகள் இல்லாமல் பேரவையில் நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என்று அறிவிக்கக் கோரி தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆளுநர் வித்யாசாகர் ராவை நேரில் சந்தித்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) மனு அளித்திருந்தனர்.

மேலும் பேரவை நிகழ்வுகளை கண்டித்து தி.மு.க சார்பில் மாவட்ட தலைநகரங்களில் எதிர்வரும் 22ஆம் திகதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg