Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

குடாகம குப்பைமேட்டில் கழிவகற்றும் குழி தோண்ட நடவடிக்கை: பிரதேச மக்கள் எதிர்ப்பு

In இலங்கை
Updated: 09:39 GMT, Feb 19, 2017 | Published: 09:16 GMT, Feb 19, 2017 |
0 Comments
1183
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam
kudagama protest (6)

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குடாகம பகுதியிலுள்ள குப்பைமேட்டில் கழிவகற்றும் குழியொன்றை தோண்டுவதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியினை மறித்து பிரதேச மக்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஹட்டன் – டிக்கோயா நகர சபைக்குட்பட்ட பகுதியில் சேர்க்கப்படும் கழிவுகள் அட்டன் குடாகம பகுதியிலேயே கொட்டப்படுகின்றன. இதனால் பல்வேறு சூழல் சீர்கேடுகள் ஏற்பட்டுள்ளதோடு, பிரதேசம் முழுவதும் துர்நாற்றம் வீசுவதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு, மகாவலி ஆற்றிற்கு நீர்வழங்கும் கிளை ஆறுகளில் ஒன்றான குடாஓயா ஆற்றுடன் இக் குப்பைகள் கலப்பதால் மகாவலி ஆற்றின் நீர் அசுத்தமடைந்துள்ளது. இதனால், மகாவலி ஆற்றை பயன்படுத்தும் மக்கள் பல்வேறு அசௌகரியகங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான நிலையில், அங்கு மற்றுமொரு கழிவகற்றும் குழி தோண்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திற்கு விரைந்த ஹட்டன் பொலிஸார், டிக்கோயா நகரசபை செயலாளருடன் தொலைபேசி ஊடாக தொடர்புகொண்டு மக்களின் பிரச்சினை குறித்து எடுத்துரைத்துள்ளார். இதனையடுத்து நாளைய தினம் நகரசபை செயலாளருடன் பேச்சுவார்த்தை நடத்த ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த ஆர்ப்பாட்டம் காரணமாக ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியின் போக்குவரத்து சுமார் 1 மணித்தியாலயம் தடைப்பட்டிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

kudagama protest (4) kudagama protest (5) kudagama protest (3) kudagama protest (1) kudagama protest (2)

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg