Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற தி.மு.க-வின் கோரிக்கை நியாயமற்றது: வைகோ

In இந்தியா
Updated: 09:34 GMT, Feb 19, 2017 | Published: 09:34 GMT, Feb 19, 2017 |
0 Comments
1239
icon_com
This post was written by : Shailu
vaiko

தமிழக சட்டப்பேரவையில் இரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற தி.மு.க-வின் கோரிக்கை நியாயமற்றது என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

சென்னையில் இருந்து கோவை வந்த அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் நேற்று (சனிக்கிழமை) கருத்து தெரிவிக்கையிலேயே மேற்குறித்தவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ‘தமிழகத்தில் இதற்கு முன்னர், மூன்று முறை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. இரகசிய வாக்கெடுப்பு என்பது சட்டப்பேரவையிலும், நாடாளுமன்றத்திலும் நடைபெற்றது கிடையாது.

எனவே, ரகசிய வாக்கெடுப்பு என்ற தி.மு.க-வின் கோரிக்கை நியாயமற்றது. ஆனால், ஓய்வுபெற்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜு போன்றவர்கள் கூட இரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சொல்வது மிகவும் ஆச்சரியமாக உள்ளது.

சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் 15 நாள் அவகாசம் கொடுத்தபோது, அது குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும் என்று கூறிய  ஸ்டாலின், தற்போது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு அவகாசம் கொடுக்க வேண்டும் என கேட்பது ஏன்?

சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கு, இரகசியமாக நடைபெற வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவரும், ஓ.பன்னீர்செல்வமும் திரும்பத் திரும்பக் கூறுவதும், அதனையே வலியுறுத்தி சமூகத்தின் பல்வேறு துறைகளில் இருக்கின்ற பலர் ஆதரித்து அறிக்கை விடுவதும், தொலைக்காட்சிகளில் அக்கருத்தை பதிவு செய்வதும் தொடர்ந்துகொண்டிருக்கின்றது.

இதுகுறித்து தமிழ்நாடு சட்டசபை விதிகளும், நாடாளுமன்ற மரபுகளும் எப்படி திட்டவட்டமாக வரையறுத்துள்ளன என்பதை தெளிவுபடுத்த நான் விரும்புகிறேன்.நம்பிக்கை வாக்கெடுப்பில் இரகசிய வாக்கு என்ற பேச்சுக்கே இடம் இல்லை.

1952 ஜூலை 3ஆம் திகதி ராஜாஜி அமைச்சரவைக்கு நம்பிக்கை வாக்கு சட்டப்பேரவையில் நடைபெற்றபோதும், 1972 டிசம்பரில் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் மீதான நம்பிக்கை வாக்கின் போதும், 1988 ஜனவரி 28 ஆம் திகதி முதல்வர் ஜானகி அமைச்சரவை நம்பிக்கை வாக்கின்போதும் எத்தகைய முறை கடைப் பிடிக்கப் பட்டதோ, அதே முறையைத்தான் இன்றைய சட்டப்பேரவைத் தலைவர் தனபால் கடைப்பிடித்துள்ளார்.

நாடாளுமன்றத்திலும், தமிழக சட்டமன்றத்திலும் இரகசிய வாக்கு என்ற பேச்சுக்கே இடம் இல்லை. இதனை நல்லறிவாளர்களும், கற்றோரும், அரசியலில் அக்கறை கொண்டோரும், தமிழக மக்களும் அறிந்து கொள்ள வேண்டும்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg