Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புனே அணிக்கு புதிய தலைவர் நியமனம் – டோனி நீக்கம்

In கிாிக்கட்
Updated: 11:16 GMT, Feb 19, 2017 | Published: 09:54 GMT, Feb 19, 2017 |
0 Comments
1138
icon_com
This post was written by : Surenth
Steve Smith And MS Dhoni

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டித் தொடரில் பங்கேற்கும் புனே அணியின் புதிய தலைவராக அவுஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த அணியின் தலைவராக இருந்த மகேந்திர சிங் டோனி ஏழாவது இடத்திற்கு பின் தள்ளப்பட்டமையாலேயே அவர் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

சென்னை அணியின் தலைவராக இருந்த டோனியை புனே அணி 12.5 கோடி ரூபாய் கொடுத்து ஒப்பந்தம் செய்தது. இதன்படி கடந்த ஐ.பி.எல் தொடரில் அவர் அணித்தலவராக செயற்பட்டார். இந்த நிலையில் குறித்த தொடரில் புனே அணி படு தோல்வியை சந்தித்தது.

இதனையடுத்து, டோனி அணித்தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் புதிய அணித்தலைவராக ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg