Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அடுத்த மாதத்திலிருந்து நடைமுறைக்கு வரும் புதிய ஒரு பவுண்ட்ஸ் நாணயங்கள்!

In
Published: 10:28 GMT, Feb 19, 2017 |
0 Comments
1135
icon_com
This post was written by : Anojkiyan
news

தற்போது புழக்கத்தில் இருக்கும் ஒரு பவுண்ட்ஸ் நாணயங்களில் 30 இல் ஒன்று போலியான நாணயம் என கண்டறியப்பட்டுள்ள நிலையில், அடுத்த மாதத்திலிருந்து புதிய பவுண்ட்ஸ் நாணயங்கள் மக்கள் பாவனைக்காக வெளியிடவுள்ளதாக பிரித்தானியா வங்கி அறிவித்துள்ளது.

இதன்படி, குறித்த பவுண்ட்ஸ் நாணயம் மார்ச் மாதம் 28ஆம் திகதி முதல் மக்கள் பாவனைக்காக வெளியிடவுள்ளது.

புதிதாக வெளியாகவிருக்கும் நாணயமானது இருவேறு உலோகங்களால் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது புழக்கத்தில் இருக்கும் வட்ட வடிவமான ஒரு பவுண்ட்ஸ் நாணயங்கள் வரும்ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதியில் இருந்து செல்லுபடியாகாது எனவும், குறித்த நாணயங்களை வாடிக்கையாளர்களிடம் இருந்து வியாபாரிகள் வாங்கவோ விநியோகிக்கவோ வேண்டாம் என பிரித்தானியா வங்கி அறிவுறுத்தியுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg