Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நல்ல கதாபாத்திரங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுப்பேன்: சோனம்கபூர்

In சினிமா
Updated: 11:01 GMT, Feb 19, 2017 | Published: 10:46 GMT, Feb 19, 2017 |
0 Comments
1111
icon_com
This post was written by : Shailu
Sonam Kapoor

ஹிந்தி நடிகை சோனம்கபூர் ஹொலிவுட் படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார். இதற்காக அமெரிக்காவில் உள்ள AbV நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளார்.

இதையடுத்து அவர்கள் அவருக்கு பொருத்தமான ஹொலிவுட் படவாய்ப்பை தேடிவருகிறார்கள். இது குறித்து சோனம்கபூர் அளித்த செவ்வியில் தெரிவித்துள்ளதாவது,

‘ ஹிந்தி பட உலகம் ஆனாலும், ஹொலிவுட் என்றாலும் நல்ல பாத்திரம் கிடைத்தால் மட்டுமே நடிப்பேன். என்னை தேடிவரும் எல்லா படங்களிலும் நடிக்க ஒப்புக்கொள்ளமாட்டேன்.

சீன படம் உட்பட எந்த மொழிபடமாக இருந்தாலும் நல்ல கதாபாத்திரங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுப்பேன்.

நான் ஹொலிவுட் சென்றாலும் தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா அளவுக்கு வரமுடியாது. அவர்களுடன் என்னை ஒப்பிடமாட்டேன். அவர்கள் இருவரும் ஹொலிவுட்டில் சிறப்பாக பணியாற்றுகிறார்கள். நான் அவர்கள் அளவுக்கு இல்லாவிட்டாலும் ஓரளவுக்கு வருவேன்’ என்று தெரவித்துள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg