Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நியூஸிலாந்துக்கு அருகில் உலகின் 08 ஆவது புதிய கண்டம் கண்டுபிடிப்பு

In அறிவியல்
Published: 10:33 GMT, Feb 19, 2017 |
0 Comments
1262
icon_com
This post was written by : Sylviya
15 - 1

புவியியல் ஆராய்ச்சியில் உலகம் நிபுணத்துவம் கண்டுள்ள நிலையில், தற்போது உலகின் 08 ஆவது கண்டம் நியூஸிலாந்துக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உலகில் 07 கண்டங்களே உள்ளதாக அனைவராலும் அறியப்பட்டுள்ள நிலையில், தென் மேற்கு சமுத்திரத்தில் மூழ்கிய நிலையில் காணப்படும் புதிய நிலப் பகுதியொன்றைக் கண்டுபிடித்துள்ளதாகவும் அதனை 08 ஆவது புதிய கண்டமாகக் கருத முடியும் எனவும் இது தொடர்பில் கருத்து தெரிவித்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

நியூஸிலாந்தைச் சேர்ந்த புவியியல் ஆராய்ச்சியாளரான நிக் மோர்டைமர் தலைமையிலான விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலேயே குறித்த 08 ஆவது கண்டம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸீலான்டியா என அழைக்கப்படும் அந்தக் கண்டத்தின் ஒரு சிறிய பகுதி மட்டும் நியூஸிலாந்துக்கு அருகில் கடலுக்கு மேலாக வெளித்தோன்றிய நிலையில் காணப்படுவதாகவும், அதன் ஏனைய 94 சதவீதமான பகுதி கடலுக்குள் மூழ்கிய நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கண்டப் பகுதி உயரமான மலைகளைக் கொண்டமைந்துள்ளது எனவும் அதன் பரப்பளவு 5 மில்லியன் சதுர கிலோமீற்றர் எனவும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

15 - 2
15 - 3
Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg