Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஹிட்லர் பயன்படுத்திய தொலைபேசி ஏலத்துக்கு வருகிறது!

In ஐரோப்பா
Published: 11:31 GMT, Feb 19, 2017 |
0 Comments
1168
icon_com
This post was written by : Anojkiyan
hit

ஜேர்மனியின் சர்வாதிகாரியான அடால்ப் ஹிட்லர், பயன்படுத்திய சிவப்பு நிறத்திலானதும், அவர் பெயர் பொறித்ததுமான தொலைபேசி, ஏலத்துக்கு வருகிறது

இதன் ஏலம், அமெரிக்காவில் மேரிலாந்து மாகாணம், செசாபீக்கே நகரில் நடைபெறுகிறது.

இதன் ஆரம்ப விலை 1 லட்சம் டொலராக இருக்கும் என ஏல நிறுவனமான அலெக்சாண்டர் ஏல நிறுவனம் கூறுகிறது. அதிகபட்சமாக 3 லட்சம் டொலருக்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுபற்றி ஏல நிறுவன அதிகாரி பில் பனாகோபுலஸ் கூறும்போது, ‘ஹிட்லர் உபயோகித்த தொலைபேசி, பேரழிவுக்கு வித்திட்ட ஆயுதம். இந்த தொலைபேசியில் பேசித்தான் ஹிட்லர் உத்தரவுகளை பிறப்பித்தார்’ என குறிப்பிட்டார்.

இரண்டாம் உலகப்போரின்போது, குறித்த தொலைபேசியை கைப்பற்றிய ரஷ்ய வீரர்கள், ஒரு நினைவுச்சின்னமாக அதை இங்கிலாந்து அதிகாரி சர் ரால்ப் ரேனரிடம் ஒப்படைத்தனர். தற்போது குறித்த தொலைபேசியை அவரது மகன் ஏலத்துக்கு கொண்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg