Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

‘ராணுவமே வெளியேறு’ – நிலமீட்புக்காய் மாணவர்கள் ஆக்ரோஷமாக போராட்டம் (2ஆம் இணைப்பு)

In இலங்கை
Published: 02:20 GMT, Feb 20, 2017 |
0 Comments
1489
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam

மண்மீட்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முல்லைத்தீவு மக்களுக்கு ஆதரவாக, வடக்கிலுள்ள பாடசாலை மாணவர்கள் ஒன்றுதிரண்டு மிகவும் ஆக்ரோஷமாக போராடியுள்ளனர்.

இன்று காலை 7.30 மணிமுதல் 8.30 மணிவரை நடைபெற்ற இக் கவனயீர்ப்பு போராட்டத்தில் ‘ராணுவமே வெளியேறு’, ‘ராணுவமே எமது கல்வியை சீரழிக்காதே’, ‘எமது தாய் மண்ணில் ராணுவமே உனக்கென்ன வேலை?’, ‘எமது நிலம் எமக்கு வேண்டும்’ உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாதைகளை தாங்கியவாறு, படையினருக்கு எதிரான கோஷங்களை எழுப்பியவாறு இம் மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

protest (1) protest (4) protest (3) protest (2)

வட. மாகாணம் தழுவிய ரீதியில் மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முல்லைத்தீவு மக்களுக்கு ஆதரவாக, வடக்கு மாகாணத்திலுள்ள சகல பாடசாலை மாணவர்களும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் உள்ள மாணவர்கள் இன்று (திங்கட்கிழமை) காலை 7.30 மணி முதல் 8.30 மணிவரை இக் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

விமானப்படை மற்றும் ராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி முல்லைத்தீவு கேப்பாப்பிலவு – பிலக்குடியிருப்பில் கடந்த மாதம் 31ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட சத்தியாக்கிரக போராட்டம் இன்று 21 நாட்களை எட்டியுள்ளது. அத்தோடு, இம் மக்களுக்கு ஆதரவாகவும் ராணுவத்தின் பிடியிலுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறும் வலியுறுத்தி புதுக்குடியிருப்பு மக்களும் சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

மக்களின் இப்போராட்டத்தில் பாடசாலை மாணவர்கள் 54 பேரும் பெற்றோருடன் போராடி வருகின்ற நிலையில், அவர்களுக்கு விரைவில் தீர்வு கிடைத்து பாடசாலை செல்லும் நிலை ஏற்பட வேண்டும் என்றும் மக்கள் போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையிலும் மாணவர்களின் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

protest (1) protest (2) students protest (2)

students protest (6) students protest (5) students protest (4) students protest (3) students protest (1)

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg