Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அதிக பயணிகளை ஏற்றியமையே படகு விபத்திற்கு காரணம்: ஜனாதிபதி இரங்கல்

In இலங்கை
Updated: 04:16 GMT, Feb 20, 2017 | Published: 03:51 GMT, Feb 20, 2017 |
0 Comments
1503
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam
katukuruntha

களுத்துறை – கட்டுகுறுந்த படகு விபத்தில் உயிரிழந்தோருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரங்கல் தெரிவித்துள்ளார். அத்தோடு, பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் கூறியுள்ளார்.

கட்டுகுறுந்த கடற்பரப்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற படகு விபத்தினைத் தொடர்ந்து ஜனாதிபதி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த படகு விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதோடு, 32 பேர் உயிருடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் கவலைக்கிடமாக உள்ளநிலையில், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாமென அஞ்சப்படுகிறது.

குறித்த பகுதியிலுள்ள தேவாலயம் ஒன்றிற்கு சென்றுவிட்டு திரும்பிய யாத்திரீகர்களே இப் படகு விபத்தில் சிக்கினர். எண்ணிக்கைக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச்சென்றமையே படகு விபத்திற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

இப் பகுதியிலுள்ள தேவாலயத்தில் நடக்கும் திருவிழாவிற்கு பல வருட காலமாக படகுகளின் மூலம் யாத்திரீகர்கள் சென்றுவந்த நிலையில், இவ்வாறான அனர்த்தம் இடம்பெற்றமை இதுவே முதல்தடவையென தெரிவிக்கப்படுகிறது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg