Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கவிஞர் பரஞ்சோதியின் ‘நாங்கள் விட்டில்கள் அல்ல’ நூல் வவுனியாவில் வெளியிடப்பட்டது

In இலங்கை
Published: 04:56 GMT, Feb 20, 2017 |
0 Comments
1144
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam
book (1)

கவிஞர் ஜீ.எம்.பரஞ்சோதி எழுதிய ‘நாங்கள் விட்டில்கள் அல்ல’ நூல் வவுனியாவில் வெளியிடப்பட்டது.

வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை தமிழ்மணி அகளங்கன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.

நூல்வெளியீட்டின் முதற்பிரதியை வவுனியா தேசியற்கல்வியியற் கல்லூரி சிரேஷ்ட விரிவுரையாளர் ந.பார்த்தீபன் வெளியிட பிரதம விருந்தினர் செல்வம் அடைக்கலநாதன் பெற்றுக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து வவுனியா நுண்கலை மாணவர்களின் வரவேற்பு நடனம் மற்றும் வேப்பங்குளம் அன்பகம் சிறுவர் இல்ல மாணவர்களின் நடன நிகழ்வுகள் என்பனவும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் வட. மாகாண சுகாதார அமைச்சர் வைத்தியர் ப.சத்தியலிங்கம், வட.மாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன், மாவட்ட காலாசார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தன், மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன், மூத்த எழுத்தாளர் தமிழ்மணி மேழிக்குமரன், சேனாதிராசா, தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

book launch (6) book launch (1) book launch (2) book (2)

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg