Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தோனியின் நீக்கம் தொடர்பில் புனே அணியின் உரிமையாளர் விளக்கம்

In
Updated: 05:00 GMT, Feb 20, 2017 | Published: 05:00 GMT, Feb 20, 2017 |
0 Comments
2073
icon_com
This post was written by : Shailu
Dhoni - Sanjeev koyinka

கடந்த தொடரில் தோனி சிறப்பாக விளையாடாத காரணத்தினால், இளம் வீரரை தலைவராக தெரிவு செய்துள்ளோம் என புனே அணியின் உரிமையாளர் விளக்கமளித்துள்ளார்.

ஐ.பி.எல். தொடரில் புனே அணியின் தலைவர் பொறுப்பில் இருந்து மகேந்தர தோனி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், இது குறித்து அணியின் உரிமையாளர் சஞ்சிவ் கோயின்கா விளக்கம் அளிக்கமளிக்கையிலேயே அவர் மேற்குறித்தவாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் சஞ்சிவ் கோயின்கா கருத்து தெரிவிக்கையில்,

‘தோனி நீக்கம் செய்யப்படவில்லை. எதிர்வருகின்ற தொடருக்கு ஸ்டீவ் சுமித்தை தலைவராக நியமித்துள்ளோம்.

வெளிப்படையாக சொல்வதென்றால், கடந்த தொடரில் சிறப்பாக செயல்படவில்லை. அதனால் எதிர்வருகின்ற 10-வது ஐ.பி.எல். தொடருக்கு புதிய இளம் வீரரை தலைவராக தேர்வு செய்ய விரும்பினோம்.

ஒரு தனி நபராகவும், அணித் தலைவராகவும் தோனி மீது அதிக மதிப்பு வைத்துள்ளேன். தோனி தொடர்ந்து அணி வீரர்களுக்கு ஆலோசனைகளை வழங்குவார்.’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஐ.பி.எல் தொடரில் புனே அணியின் தலைவர் பொறுப்பில் இருந்து மகேந்தர சிங் தோனி அதிரடியாக நீக்கப்பட்டார். இருப்பினும் எதிர்வருகின்ற தொடரில் விக்கட் காப்பாளராகவும், துடுப்பாட்ட வீரராகவும், அவர் விளையாடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோனி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்து சில வாரங்களே ஆன நிலையில், தற்போது ஐ.பி.எல் தொடரில் புனே அணி தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தோனிக்கு பதிலாக அவுஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் எதிர்வருகின்ற ஐ.பி.எல். தொடரில் புனே அணிக்கு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஐ.பி.எல் தொடரில் தோனி தலைமையிலான அணி 14 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg