Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நம்பிக்கை வாக்கெடுப்பில் சட்டமன்றத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விளக்கம் கோரப்பட்டுள்ளது

In இந்தியா
Published: 05:30 GMT, Feb 20, 2017 |
0 Comments
1286
icon_com
This post was written by : Surenth
1480980134-vidyasagar-rao

தமிழக சட்டமன்றத்தில் இடம்பெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது ஏற்பட்ட சம்பவம் தொடர்பில் சட்டமன்ற செயலாளரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொறுப்பு ஆளுநர் வித்தியாசாகர் ராவ் சட்டமன்ற செயலாளர் ஜமாலுதீனுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு கோரப்பட்டது.

கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அசம்பாவிதங்கள் இடம்பெற்றதாக எதிர்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின் ஆளுநரை நேரில் சந்தித்து முறைப்பாடு செய்திருந்தார்.

இந்த நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட்டோர் ஆளுநரை சந்தித்து இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.

இதனையடுத்தே ஆளுநர் குறித்து கோரிக்கை கடிதத்தை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg