Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழ் நீதிபதியின் நியமனத்திற்கு மஹிந்த ராஜபக்ஷ கடும் எதிர்ப்பு

In இலங்கை
Published: 05:38 GMT, Feb 20, 2017 |
0 Comments
3063
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam
Mahinda-R

யாழ். நீதிமன்ற நீதிபதியாக மட்டக்களப்பில் சட்டத்தரணியாக கடமையாற்றிய ராமநாதன் கண்ணன் என்பவர் நியமிக்கப்பட்டமை நீதிமன்ற சுயாதீனத்திற்கு முரணானது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் குறித்த நியமனம் தொடர்பில் ஒன்றிணைந்த எதிரணியினர் தொடர்ந்தும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற நிலையில், முன்னாள் ஜனாதிபதியும் தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையொன்றில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமது ஆட்சிக்காலத்தில் நீதிபதிகளாக வெளிவாரி சட்டத்தரணிகள் நியமிக்கப்படவில்லையென தெரிவித்துள்ள மஹிந்த, ராமநாதன் கண்ணனின் நியமனத்தை தடுக்க உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg