Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முஸ்லிம்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நியூயோர்க்கில் பேரணி

In உலகம்
Published: 06:01 GMT, Feb 20, 2017 |
0 Comments
1193
icon_com
This post was written by : Sylviya

நியூயோர்க்கில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முஸ்லிம்களுக்கு ஆதரவு தெரிவித்து பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஏழு முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த மக்கள் அமெரிக்காவுக்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் ட்ரம்ப் நிர்வாகம் தொடர்பில் அதிருப்தியை வெளிபடுத்தும் வகையிலுமே குறித்த பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘”ஐ ஆம் முஸ்லிம் டூ” (I am Muslim Too) என பெயரிடப்பட்ட குறித்த பேரணியில் திரைப்பிரபலங்களான சூசன் சரன்டன் (Russell Simmons) மற்றும் ரஸ்சல் சிம்மன்ஸ் (Susan Sarandon) ஆகியோரும் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பேரணியில் கலந்துகொண்ட ஒருவர் கருத்து தெரிவித்த போது, “ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையிலும் முஸ்லிம்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையிலுமே நான் இந்த பேரணியில் கலந்துகொண்டுள்ளேன். குடியேற்றவாசிகள் மற்றும் அகதிகளுக்கு இருப்பிடம் அளிக்கப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg