Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விமல் வீரவன்சவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு

In இலங்கை
Updated: 06:03 GMT, Feb 20, 2017 | Published: 06:00 GMT, Feb 20, 2017 |
0 Comments
1267
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam

வாகன முறைகேடு தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவை எதிர்வரும் மார்ச் மாதம் 6ஆம் திகதிவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது நீதவான் லங்கா ஜயரத்ன இவ் உத்தரவை பிறப்பித்துள்ளார்.

கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் ஜனாதிபதி செயலகத்திற்குச் சொந்தமான வாகனங்களை தவறாக பயன்படுத்தி அரசாங்கத்திற்கு 41 மில்லியன் ரூபா நட்டத்தை ஏற்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டு, கடந்த ஜனவரி மாதம் 10ஆம் திகதி நிதி மோசடி தடுப்புப் பிரிவினரால் விமல் வீரவன்ச கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg