Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தென் மண்டல கபடி போட்டி: தமிழ்நாடு மற்றும் கர்நாடகா அணிகள் இறுதி போட்டிக்கு முன்னேற்றம்

In விளையாட்டு
Updated: 06:03 GMT, Feb 20, 2017 | Published: 06:02 GMT, Feb 20, 2017 |
0 Comments
1116
This post was written by : Shailu

நெல்லை மாவட்டத்தில் நேற்று இடம்பெற்ற தென் மண்டல கபடி போட்டியில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா அணிகள் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.

நெல்லை மாவட்டம் அகஸ்தியர்பட்டியில் 64-வது தென் மண்டல கபடி போட்டி நடைபெற்று வருகிற நிலையில், 3-வது நாளான அரையிறுதி போட்டி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இடம்பெற்றது.

முதலாவதாக கர்நாடகா அணியும், புதுச்சேரி அணியும் மோதின. இதில் கர்நாடகா அணி 11 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்குள் நுழைந்தது. கர்நாடகா அணி 43 புள்ளிகளும், புதுச்சேரி அணி 32 புள்ளிகளையும் பெற்றிருந்தன.

மற்றொரு அரையிறுதி போட்டியில், தமிழ்நாடு அணியும், கேரள அணியும் விளையாடின. போட்டியின் முடிவில் 2 புள்ளிகள் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது.

இதனையடுத்து, தமிழ்நாடு அணி 34 புள்ளிகளையும், கேரள அணி 32 புள்ளிகளையும் எடுத்திருந்த நிலையில், தமிழ்நாடு மற்றும் கர்நாடகா அணிகள் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg