Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கைது செய்யப்பட்ட பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் 15 பேருக்கும் விளக்கமறியல் (2ஆம் இணைப்பு)

In இலங்கை
Updated: 15:39 GMT, Feb 20, 2017 | Published: 06:35 GMT, Feb 20, 2017 |
0 Comments
1214
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam
peradeniya univerity

கைது செய்யப்பட்ட பேராதனை பல்கலைக்கழகத்தின் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் 15 பேரும் மார்ச் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

முதலாம் வருட மாணவர்களை பகிடிவதை செய்த குற்றச்சாட்டில் இன்று அதிகாலை இவர்கள் பேராதனை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு  கண்டி நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிடிவதையால் 8 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி: 15 மாணவர்கள் கைது

பேராதனை பல்கலைக்கழகத்தில் பகிடிவதைக்கு உள்ளான முதலாம் வருட மாணவர்கள் 8 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட மாணவர்கள் 15 பேரை பொலிஸார் நேற்று இரவு கைதுசெய்துள்ளனர். இவர்களை இன்று (திங்கட்கிழமை) கண்டி நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பகிடிவதை தொடர்பில் பேராதனை பல்கலைக்கழக சிரேஷ்ட மாணவர்கள் மீது ஏற்கனவே பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், பல்கலைக்கழகத்தில் இனிவரும் காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவதை தடுப்பதாக பல்கலை நிர்வாகம் அறிவித்திருந்த நிலையில் இச் சம்பவம் பதிவாகியுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg