Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தலைமை செயலகம் சென்ற முதல்வர் 5 ஆவணங்களில் கையெழுத்திட்டார்

In இந்தியா
Updated: 10:26 GMT, Feb 20, 2017 | Published: 08:06 GMT, Feb 20, 2017 |
0 Comments
1161
icon_com
This post was written by : Surenth
TN Edappadi Palanisamy

முதலமைச்சராக பதவியேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி தலைமை செயலகம் சென்று முக்கிய ஆவணங்களில் இன்று (திங்கட்கிழமை) காலை கையெழுத்திட்டுள்ளார்.

முதலமைச்சரை தலைமை செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் உட்பட அமைச்சர்கள் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்கள் என பலர் வரவேற்றனர்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தேர்தலின் போது வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் ஐந்து ஆவணங்களில் புதிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட்டார்.

குறிப்பாக, 500 மதுபானக்கடைகள் மூடுதல், உழைக்கும் மகளிருக்கு 50 சதவீத மானியத்தில் இருசக்கர வாகனம் (அம்மா இருச்சக்கர வாகனம்), ஆண்டுக்கு 6 இலட்சம் கர்ப்பிணி பெண்களுக்கு நிதி உதவி திட்டம், மகப்பேறு நிதி உதவி 12 ஆயிரம் ரூபாவில் இருந்து 18 ஆயிரம் ரூபாவாக உயர்வு, ஏழை கர்ப்பிணி தாய்மார்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டம், மீனவர்களுக்கு என தனி வீட்டு வசதி திட்டம் என்பன அடங்குகின்றன.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg