Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உள்ளாட்சி தேர்தலுக்கான திகதியை அறிவிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு

In இந்தியா
Published: 08:56 GMT, Feb 20, 2017 |
0 Comments
1117
icon_com
This post was written by : Surenth
Tamilnadu Election

உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான சரியான திகதியை உடனடியாக அறிவிக்கும் படி தேர்தல் ஆணையகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தி.மு.க சார்பில் எஸ்.டி. பிரிவினருக்கு போதிய இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என தொடரப்பட்ட வழக்கு இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை முன்னர் விசாரணை செய்த நீதிபதி என்.கிருபாகரன் “உள்ளாட்சி தேர்தல் தொடர்பான குறித்த அறிவிப்பாணை தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டவிதிகளின்படி பிறப்பிக்கப்படவில்லை. எனவே, இந்த தேர்தல் அறிவிப்பை இரத்து செய்கிறேன். சட்டவிதிகளை பின்பற்றி புதிய தேர்தல் அறிவிப்பினை வெளியிட்டு, எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்” என்று கடந்த வருடம் ஒக்டோபர் 4ஆம் திகதி தீர்ப்பு வழங்கினார்.

குறித்த தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையமும் தனித்தனியே மேன் முறையீடு செய்தது.

இந்த மேன் முறையீட்டின் மீதான விசாரணையின் போதே உயர் நீதிமன்ற நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg