Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தன்னை மிரட்டுவதாகவும் ஆபாச வார்த்தையால் பேசுவதாகவும் சரஸ்வதி முறைப்பாடு

In இந்தியா
Published: 09:49 GMT, Feb 20, 2017 |
0 Comments
1138
icon_com
This post was written by : Surenth
Saraswathi

தொலைபேசியில் தனக்கு மிரட்டல் வருவதாகவும் ஆபாசமாக பேசுவதாகவும் கூறி பொலிஸ் ஆணையாளரிடம் அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் இன்று (திங்கட்கிழமை) பொலிஸ் ஆணையாளரை நேரில் சந்தித்து அவர் முறைப்பாடு மேற்கொண்டுள்ளார்.

தன்னுடைய தொலைபேசிக்கு இரவு 10 மணிக்கு பிறகு அழைப்பை மேற்கொண்டு மிரட்டல் விடுப்பதாகவும் மற்றும் ஆபாசமாகவும் பேசுவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த தொலைபேசி அழைப்புக்கள் வெளி மாநிலங்களில் இருந்து வருவதாக தெரிவித்த அவர் தன்னுடைய அரசியில் நிலைப்பாட்டை எதிர்த்து ஆபாசமாக பேசுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல, முன்னாள் அமைச்சர்களான பா.வளர்மதி, கோகுல இந்திரா, மற்றும் நடிகை விஜய சாந்தி ஆகியோரின் தொலைபேசிக்கும் இவ்வாறான தொலைபேசி அழைப்புக்கள் வருவதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை, கடந்த சில நாட்களாக அ.தி.மு.கவில் ஏற்பட்ட பிளவு காரணமாக சசிகலாவிற்கு ஆதரவு தெரிவித்து சசிகலாவை முதல்வராக்க வேண்டும் என முயற்சித்து இருந்தார்.

இந்த நிலையில் சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்றதும் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்து செயற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg