Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐ.பி.ல் ஏலத்தில் இலங்கை அணித் தலைவருக்கு நல்ல மவுசு!

In கிாிக்கட்
Updated: 14:24 GMT, Feb 20, 2017 | Published: 10:09 GMT, Feb 20, 2017 |
0 Comments
3437
icon_com
This post was written by : Shailu
anjalo methews - Asela Gunaratne

ஐ.பி.எல் – 2017 போட்டிகளுக்கான ஏலத்தில் இலங்கை வீரர்களான அஞ்சலோ மத்தியூஸ் மற்றும் குணவர்த்தன ஆகியோர் ஐ.பி.எல் அணிகளினால் ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளனர்.

2017 ஆம் ஆண்டு ஐ.பி.எல். போட்டிகளுக்கான ஏலம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை அணித் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் 4.5 கோடி ரூபாய்க்கு டெல்லி டெயார் டெவில்ஸ் அணியினால் வாங்கப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து இலங்கை அணியின் அதிரடி ஆட்டக்காரர் அசேல குணரத்ன மும்பை இந்தியன்ஸ் அணியால் 30 இலட்சம் இந்திய ரூபாவுக்கு வாங்கப்பட்டுள்ளார்.

அவுஸ்ரேலியாவில் நடைபெற்று வருகின்ற இலங்கை – அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையிலான 2 ஆவது ரி- ருவென்ரி போட்டியில் அபாரமாக ஆடிய குணரத்ன, 89 ஓட்டங்ளை பெற்று அணியை வெற்றியடைய செய்திருந்த நிலையில் மும்பை இந்தியனஸ் அவரை ஏலத்தில் வாங்கியுள்ளது.

மேற்படி ஏலத்தில் கொள்வனவு செய்யப்பட்ட இரண்டாவது இலங்கை வீரர் அசேல குணரத்ன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg