Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஓமந்தையில் ‘கமநல கல்வி அபிவிருத்தி நிதியம்’ உதயம்

In இலங்கை
Published: 11:08 GMT, Feb 20, 2017 |
0 Comments
1133
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam
omanthai1

கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரிவுக்குட்பட்ட விவசாய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் கல்வித்தரத்தினை உயர்த்துவதற்காக ஓமந்தையில் கமநல கல்வி அபிவிருத்தி நிதியம் என்னும் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இவ்வமைப்பின் அங்குரார்ப்பண நிகழ்வு ஓமந்தை, கமநல அபிவிருத்தித் திணைக்களத்தில் தலைவர் ஏ.நாகரசா தலைமையில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்றது.

ஓமந்தை அதிகளவிலான விவசாயக் குடும்பங்களைக் கொண்ட பிரதேசமாகும்.போரினால் கடுமையான பாதிப்புக்களை சந்தித்ததன் காரணமாக இப்பகுதியில் இருந்து கல்வியைத் தொடரும் மாணவர்கள் பல்வேறு சவால்களை எதிர்நோக்கியதால் சில மாணவர்கள் பாடசாலை கல்வியை இடைவிட்டும் உள்ளனர். இதனால் இப்பிரதேச மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் ஒமந்தை கமநல அபிவிருத்தி திணைக்கள பிரிவுக்குட்பட்ட விவசாயிகள், கல்வித்துறை சார்ந்தோர், வர்த்தக பிரிவினர் ஆகியோரை உள்ளடக்கி கல்விக்கான உதவியை வழங்கும் நோக்கோடு இவ் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர் ஆர்.விஜயகுமார், ஓமந்தைப் பகுதி கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் என்.திலீபன், கமநல திணைக்கள உத்தியோகத்தர்கள், விவசாயிகள், அப்பகுதி பிரமுகர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

aaa (1) aa (1)

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg