Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விராட் கோஹ்லியை ரூ.110 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ள ‘பூமா’

In கிாிக்கட்
Updated: 11:01 GMT, Feb 20, 2017 | Published: 10:39 GMT, Feb 20, 2017 |
0 Comments
2035
icon_com
This post was written by : Shailu
virat kohli

சர்வதேச விளையாட்டு நிறுவனமான ‘பூமா’ இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லியை 8 ஆண்டுகளுக்கு ரூ.110 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

இதன்மூலம் இந்திய வீரர்களில் ஒருவர் ஒரே விளம்பரத்தில் அதிக தொகைக்கு ஒப்பந்தம் ஆகியிருப்பது புதிய சாதனையாக கருதப்படுகின்றது.

விராட் கோஹ்லி கிரிகெட் மூலம் மட்டுமல்லாமல் விளம்பரங்கள் வாயிலாகவும் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து வருகிறார்.

இந்நிலையில் விராட் கோஹ்லி ஒரு விளம்பரத்தில் மட்டும் ரூ.110 கோடிக்கு ஒப்பந்தமாகி இருக்கிறார். சர்வதேச விளையாட்டு நிறுவனமான ‘பூமா’ விராட் கோலியை 8 ஆண்டுக்கு ரூ.110 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்திய விளையாட்டு வீரர் ஒருவர் ஒரே விளம்பரத்தில் இவ்வளவு அதிகமான தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். இது புதிய சாதனையாகும்.

தெண்டுல்கர், டோனி ஆகியோர் பல விளம்பர நிறுவனங்களில் சேர்ந்து தான் ரூ.100 கோடிக்கு மேல் ஒப்பந்தமாகி இருந்தனர்.  24 ஆண்டு காலம் விளையாடிய டெண்டுல்கர் 50 விளம்பர நிறுவனங்கள் மூலம் ரூ.500 கோடிக்கு மேல் ஒப்பந்தமாகி இருந்தார். இதே போல் டோனியும் பல விளம்பர நிறுவனம் மூலம் ரூ.180 கோடிக்கு மேல் ஒப்பந்தம் ஆகி இருந்தார்.

மேலும் விராட் கோஹ்லி ஒப்பந்தமாகி உள்ள ‘பூமா’ நிறுவனத்தில் பிரபல தடகள வீரர்களான உசேன் போல்ட், ஆசபா போவெல் (ஜமைக்கா), கால்பந்து வீரர்கள் ஹென்றி, ஒலிவர் ஆகியோர் ஏற்கனவே விளம்பர தூதுவர்களாக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg