Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சட்ட மன்ற விவகாரத்தில் இரு தரப்பிலும் தவறு என்கிறார்: பொன்.இராதாகிருஷ்ணன்

In இந்தியா
Published: 11:03 GMT, Feb 20, 2017 |
0 Comments
1140
icon_com
This post was written by : Surenth
Pon Radhakrishnan

சட்ட மன்ற விவகாரத்தில் சபாநாயகர் மீதும் தவறு இருக்கிறது அதேபோல தி.மு.க.வின் மீதும் தவறு இருக்கிறது என மத்திய அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழக அரசியல் நிலைமை தொடர்பில் இன்று (திங்கட்கிழமை) சென்னை விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழக சட்ட மன்ற நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்ற போது தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுமே கேலி கூத்து நடைபெறும் இடமாக மாற்றிவிட்டனர்.

ஏற்கனவே நான் சொன்னது போல சட்ட மன்றம் துகில் உரியும் இடமாக மாறிவிட்டது. சட்ட மன்ற விவகாரத்தில் சபாநாயகரிமும் தவறு இருக்கிறது அதேபோல தி.மு.க.வின் மீதும் தவறு இருக்கிறது.

தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆளும் கட்சி 15 நாளில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என கவர்னர் உத்தரவிட்ட போது 2 நாளிலேயே பெரும்பான்மையை நிரூபித்தார்கள்.

உள்ளாட்சி தேர்தலை மே மாதம் நடத்த போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த அரசு அடுத்த மாதமே தேர்தல் நடத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை” எனவும் இதன் போது அவர் சுட்டிக்காட்டினார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg